Thursday 1 January 2015

மாய முகமூடி

மூச்சுக்கு முடிச்சு
மாய முகமூடியாய்
கனவான நனவுக்கும்
நனவாகும் கனவுக்கும்
இடையே நசுங்கி
வாழ்வின் எல்லை
மூச்சை கர்மாவின்
கடை நிலையில்
கணக்குப் பக்கங்கள்
யாவும் சரியானால்
கிழித்திடலாம்
முகத்திரையை ..!
மாய உலகின்
மந்திர மயக்கத்தில்
மதி பிறண்டு
வழி மறந்து
மாய வலைக்குள்
சிக்கி மகிழ்ந்தால்
ஆசையின் தூபம்
ஆணவத்தின்
ஆதிக்கம்
கைகுலுக்கி
உள்ளத்தைக்
கள்ளமாக்கி
உயிருக்குள்
பாரமேற்றி....
இரண்டு வழிப்
பாதையில்
முக்தியின்
கதவுகள்
மூடும் போது..
மீண்டும்......
பிரபஞ்சச் சிறை....
குடும்பச்  சிறை
உடல் சிறை..
அதனுள்......
உயிர்ச் சிறை...!
மாய பூமியை
கனவாக்கி
சத்திய பாதையை
சரியாக்கி..
ஜீவிதம் கடந்திடின்
ஜீவன் முக்தி பெறும்
காலச் சக்கரம்
சுழன்றாலும்
மாயை சூழ்ந்தாலும்
சூட்சும மனிதனுக்கு
மரணம் கூட
வருவதில்லை...!


ஜெயஸ்ரீ ஷங்கர்

4 comments:

  1. //காலச் சக்கரம் சுழன்றாலும் மாயை சூழ்ந்தாலும்
    சூட்சும மனிதனுக்கு மரணம் கூட வருவதில்லை...!//

    அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //காலச் சக்கரம் சுழன்றாலும் மாயை சூழ்ந்தாலும்
    சூட்சும மனிதனுக்கு மரணம் கூட வருவதில்லை...!//

    அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  4. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் தளத்தை அவரது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. தங்கள் பதிவுகளைப் படித்தேன். பாராட்டுக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete